பிரபஞ்சசக்தியும்சித்தர்களின்வளமும்

பிரபஞ்சசக்தியும்சித்தர்களின்வளமும்

பிரபஞ்ச சக்தியும் சித்தர்களின் வளமும்

AUTHORS – DR. V.C. SRINIVASAN*, DR. A. LAKSHMI DUTTAI** & DR. SRINAGABOSHINI ARANGARAJ**

* ASST.PROF IN TAMIL &A.O, NANDHA ARTS AND SCIENCE COLLEGE (AUTONOMOUS), ERODE-638052

** ASST.PROFESSOR, SCHOOL OF TAMIL, PONDICHERRY UNIVERSITY.PUDUCHERRY.

*** ASSOCIATE PROFESSOR, DEPARTMENT OF MUSIC, UNIVERSITY OF JAFFNA, SRILANKA.

BEST CITATION – DR. V.C. SRINIVASAN, DR. A. LAKSHMI DUTTAI & DR. SRINAGABOSHINI ARANGARAJ, பிரபஞ்ச சக்தியும் சித்தர்களின் வளமும், ILE MULTIDISCIPLINARY JOURNAL, 4 (2) OF 2025, PG. 308-312, APIS – 3920-0007 | ISSN – 2583-7230.

முன்னுரை

தமிழ் மரபில் ஆன்மிக சிந்தனை, யோகம் மற்றும் தத்துவ பார்வைகள் மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களாகக் கருதப்படுகின்றன. உலகின் இயங்கும் சக்தியை “பிரபஞ்ச சக்தி” என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்தி அனைத்திலும் ஊடுருவி, உயிரினங்களுக்கும் அண்டச் சுழற்சிக்கும் உயிர் மூச்சாக விளங்குகிறது. சித்தர்கள் இந்த பிரபஞ்ச சக்தியின் உள்ளார்ந்த உண்மையை தங்கள் ஆன்மிக சாதனைகள், தியானம், யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தெய்வீக அனுபவங்களின் மூலம் உணர்ந்து மனிதகுல நலனுக்காகப் பயன்படுத்தியவர்கள்.